யாழ்.வரணியை சேர்ந்த சிறுவன் தூக்கில் தொங்கி மரணம்

யாழ்.வரணியை சேர்ந்த சிறுவன் தூக்கில் தொங்கி மரணம்

வரணி இடைக்குறிச்சியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

ரியூசனுக்குச் செல்லமறுத்த இவரை தந்தையார் தண்டித்ததால் இவர் தூக்கில் தொங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனோகரன் தனுராஜ் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். வீட்டு வளவில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்ட இவரை மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சடலம் பிரதே பரிசோதனைக்கான மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், மரண விசாரணை செய்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.