யாழ் வலி மேற்குப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள பல வான் கதவுகள்

 யாழ் வலி மேற்குப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள பல வான் கதவுகள்

அதிக மழை காரணமாக வலி மேற்குப் பகுதியின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அந்தப் பகுதியில் காணப்பட்ட பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்கினையடுத்து சங்கானை மற்றும் அராலி பகுதி விவசாய சம்மேளனங்கள் மேற்படி நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டி இப் பிரதேசத்திலுள்ள வான் கதவுகளை திறக்குமாறு சங்கானை பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக வான் கதவுகள் திறக்கப்ப்டு மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய காணிகள் பாதுகாக்கப்பட்டதாக  செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார்.