யாழ்.வலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை விடுவிக்கப்படும்

யாழ்.வலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை விடுவிக்கப்படும்

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட 8 கிராமங்களை உள்ளடக்கிய 570 ஏக்கர் காணிகளும் நாளை விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238),
வறுத்தலைவிளான்- (ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 570 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது. 
 
எனவே வறுத்தலைவிளான் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட தெல்லிப்பழை வைத்தியசாலை வீதி வழியாகவும், பலாலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட அச்சுவேலி தம்பாட்டி வழியாகவும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு செல்லும் மக்கள் தெல்லிப்பழை,வீமன்காமம் புகையிரத வீதிவழியாகவும் சென்று தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தப் பகுதியில் மீளக்குடியேறும் மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.