யாழ்.வல்லைச்சந்தியில் விபத்தில் அச்சுவேலியை சேர்ந்தவர் காயம்

யாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் நேற்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து சென்ற முச்சக்கரவண்டியும் உடுப்பிட்டியிலிருந்து சென்ற சிற்றூர்தியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.