யாழ்.வல்வெட்டித்துறைக் கடலுக்குள் இடம்பெற்ற திருமணம்(படங்கள்)

யாழ்.வல்வெட்டித்துறைக் கடலுக்குள் இடம்பெற்ற  திருமணம்(படங்கள்)

யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று இன்று இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ் கல்லூரி ஒன்றில் உயர் கல்வியை மேற்கொண்டு வரும் காதல் ஜோடியினரான சாம்ஜெயவேல் பானுமதிக்கு இந்த வினோத திருமணம் பாக்கு நீரிணையிலமைந்த, வல்வெட்டித்துறையின் ரேவடி கடற்பரப்பில் இடம்பெற்றது.

குறித்த இந்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில், உல்லாச பயணிகளுக்கென யாழில் வடிவமைக்கப்பட்டு, வல்வை கடலில் சேவையிலீடுபடும் “Valvai Blues Boat” என்னும் சிறிய உல்லாசப் படகில் இடம்பெற்றது.