லண்டனில் தீ விபத்து:தமிழ்ப்பெண் ஒருவர் பலி

லண்டனில்  தீ விபத்து:தமிழ்ப்பெண் ஒருவர் பலி

லண்டனில் வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) அதிகாலை 2.10 மணியளவில் லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே இப் உயிரிழந்துள்ளார்.

மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயினால் பாதிக்கப்பட்டு காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் மற்றும் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் தீ விபத்தினால் உயிரிழந்தவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படவில்லை.