லண்டன் தமிழ் மருத்துவர்கள் இருவர் கடல் சுழியில் சிக்கி மரணம்.

லண்டனைச் சேர்ந்த 2 தமிழ் மருத்துவர்கள்கடல் சுழியில் சிக்கி  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். உமா ராமலிங்கம் என்னும் 42 வயது, மருத்துவரும் அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் மருத்துவர் ரவிக்குமார் ஆகியோர் ஸ்பெயின் நாட்டுக்கு அருகாமையில் உள்ள டெனரிவ் என்னும் தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். இவர்கள் கடல் கரையில் நின்றிருந்தவேளைபாரிய அலை ஒன்று வந்து, அது பின்னர் அது சுழியாக மாறியுள்ளது. இச் சுழி அவர்களது 13 வயது பிள்ளையைகடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. பிள்ளையை காப்பாற்ற அனைவரும் முயற்சி செய்துள்ளார்கள். இதன்போது உமா ராமலிங்கம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது கணவர் ராமலிங்கம் பிள்ளையை காப்பாறிவிட்டார்.

ஆனால் உதவிக்குச் சென்ற மற்ற மருத்துவரான ரவிக்குமாரையும் சுழி இழுத்துச் சென்றுவிட்டது. இதனால் இருவரும் பலியாகிவிட்டார்கள். சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில் படுமோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது, பலரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ துறையில் பட்டம் பெற்று, மேலதிகமாக படித்து மருத்துவ ஆலோசகராக மாறி இருந்தார் உமா ராமலிங்கம். இவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டு சொல்லில் அடங்காதவை. பிரித்தானியாவின் புறநகர் பகுதியான பவுடன் பகுதியில் இவர்கள் வேலைபார்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மகப்பேற்று மருத்துவராக இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். பலருக்கு பிள்ளை வரம் நல்கும் மருத்துவராக இவர்கள் இருந்துள்ளார்கள்.