வடக்கில் சில நிரப்பு நிலையங்களில் பழைய விலைக்கு எரிபொருள்கள்

வடக்கில் சில நிரப்பு நிலையங்களில் பழைய விலைக்கு எரிபொருள்கள்

கடந்த நள்ளிரவுடன் எரிபொருள்களுக்கு விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் வடபகுதியில் பரவலாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சில நிலையங்களில் எரிபொருள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

95 ஒக்ரேன் பெற்றோல் 1 லீற்றர் 30 ரூபாவால் குறைந்து 128 ரூபாவுக்கும், 92 ஒக்ரேன் பெற்றோல் 33 ரூபா குறைந்து 117 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்றும், டீசல் ஒரு லீற்றர் 95 ரூபாவாகவும் (16 ரூபா குறைந்து), சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் (23 ரூபா குறைந்து) மண்ணெண்ணெய் 65 ரூபாவாகவும் (16 ரூபா குறைந்து) விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று காலை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றபோது, தமக்கு விலைக் குறைப்பு பற்றி அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்து பழைய விலைக்கே எரிபொருள்களை விற்பனை செய்யமுற்பட்டுள்ளனர். விலைக்குறைப்புப் பற்றி அறிந்திராத பலர் இவ்வாறு பழைய விலைக்கே எரிபொருள்களை நிரப்பியுள்ளனர். எனினும் விவரம் அறிந்த பலர் முரண்பட்டதை அடுத்து புதிய விலைக்கு எரிபொருள்களை சில நிலையங்கள் விற்பனை செய்யத் தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டது. -