வடமராட்சியில் இளைஞர் ஒருவரை காணவில்லை

வடமராட்சியில் இளைஞர் ஒருவரை  காணவில்லை

வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அவரது தயாரால் நெல்லியப் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் தெற்கு, மாலு சந்தியைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்பவரே காணாமற்போனவராவார். நேற்றுமுன்தினம் வீட்டுக்கு வந்த இருவர் ஐஸ்கிறீம் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் தொழில்புரியும் இவரை அழைத்துச் சென்றனர் என்றும் நேற்றுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது