வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்.வடமராட்சி முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  

 
கடந்த 20ஆம் திகதி காணாமற்போன யாழ்ப்பாணம் நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 
 
 
 மேற்படி சம்பவம் குறித்து தெரிய வருவது,  
 
குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறையிலுள்ள நண்பியின் வீட்டுக்குச் 
சென்றுள்ளார். 
 
எனினும் மறுநாள் வரையில் அவர் வீடு திரும்பாததையடுத்து பெண்ணின் கணவன் 21ஆம் திகதி  பருத்தித்துறை
 பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
 
இந்நிலையில் குறித்த பெண் இன்று உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
மேலும் இன்றைய தினம் விறகு வெட்டுவதற்காகச் சென்ற சிலர் அங்கிருந்த பெண்ணின் சடலத்தைக்கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.