வடமராட்சியில் மர்மப்பொருள் வெடித்ததில் பெண் ஒருவர் காயம்

வடமராட்சியில் மர்மப்பொருள் வெடித்ததில்  பெண் ஒருவர் காயம்

மர்மப்பொருள் வெடித்ததில் வயல் வேலை செய்த பெண் ஒருவர் காயமடைந்தார்.

 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள யாக்கருப் பிரதேசத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

இதில் தியாகராசா கோமளா (வயது 38) என்ற பெண்ணெ காயமடைந்தவராவார்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இவர் இளைப்பாறுவதற்கா அங்கிருந்த பனை மரத்தின் கீழ் அமர்ந்த போதே மர்மப்பொருள் வெடித்துக் காயமடைந்தார்.

கயாமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு சென்று விசாணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார் வெடித்த பொருள் என்னவென்று அறிய தடயங்களை பரிசோதித்த போதும் இனங்காண முடியவில்லை. மேலதிக விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.