வடமராட்சி கற்கோவள பகுதியில் வாள் வெட்டு!மூவர் படுகாயம்!

வடமராட்சி  கற்கோவள பகுதியில்  வாள் வெட்டு!மூவர் படுகாயம்!

வடமராட்சியின் பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் கணவன் மனைவியுட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த இம்மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே இடத்தை சேர்ந்தவர்களான நகுலன் சுஜாதா (வயது 25)இ சதீஸ் உசாந்தினி (வயது 22) அவரது கணவரான திருச்செல்வம் சதீஸ் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

காணிப் பிணக்கு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த வாள்வெட்;டுச் சம்பவத்துக்கு காரணம் எனக்கூறப்படுகின்றது.

ஏற்கனவே பொன்னாலை பகுதியினிலும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அண்மையினில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.