வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி

வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி

இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்.உரும்பிராயில் இயங்கி வரும் வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இவ் வருடம் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் நான்கு மாணவர்கள் திறமையான பெறுபேற்றைப் பெற்றுச் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதேவேளை 62 மாணவர்கள் குறித்த பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 37 மாணவர்கள் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்றுத் தமது திறமையை நிருபித்துள்ளனர்.

கடந்த வருடம் 11 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் இவ் வருடம் ஜெயராசா ராகுல் ராவிட்-174 புள்ளிகள், நவநீதன் கஜானன்-167 புள்ளிகள், லக்சனா முருகானந்தன்-163 புள்ளிகள், சங்கவி ரகுபதி-160 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.