வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை ஐந்து மணிக்கு வைரவர் உற்சவத்துடன் ஆலய மஹோற்சவ திருவிழா நிறைவுக்கு வரும்.
இந்த நிலையில் ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதிகளூடாக பயணத்தை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை காண புலம்பெயர் நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தாயகம் நோக்கி படையெடுக்கின்ற நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற கொடியேற்றத்திலும் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆன்மீக செய்திகள் 06.08.2019