வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  


இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.

கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.


கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

"பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி"

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு..."

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.


இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.

கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.

பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.


வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

மேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.

மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.

தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.

வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.

சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.

கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.

அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.

இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது

கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை,  புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.


ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.

கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

ஆன்மீக செய்திகள் 20.05.2019

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019

மேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...

நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...

பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...

மாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்!

யாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...

நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி!

சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

கொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...

மழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு

யாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...

யாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...

பாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...

சமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்

சமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...

யாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்

தமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் .     பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...

யாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்

கொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...

நல்லூரிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

மணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு

சிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு  மணோன்மணி அம்மன் ஆலயத்தில்  இன்று சிறப்பாக  நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019

தெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை

சிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...

வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது

சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...

சிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா

சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...

சிறுப்பிட்டியில்……..118 வது நினைவு

சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. விழாவில் இந்திய பேச்சாளர்களின் சொற்பொழிவு இடம்பெெறும்.சிறுப்பிட்டி செய்திகள்218.01.2019

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

1 | 2 | 3 | 4 | 5 >>