வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  


இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.

கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.


கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

"பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி"

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு..."

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.


இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.

கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.

பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.


வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

மேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.

மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.

தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.

வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.

சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.

கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.

அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.

இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது

கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை,  புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.


ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.

கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

ஆன்மீக செய்திகள் 20.05.2019

ஆன்மீகச்செய்திகள்

சித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...

மீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..!

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...

இன்றைய ராசி பலன் 13.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக...

கும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்...

இன்றைய ராசி பலன் 12.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள்...

இன்றைய ராசி பலன் 10.04.2019

மேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்....

குரும்பசிட்டி முத்துமாரி அம்பாளுக்குப் புதிய சித்திரத்தேர்

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய புதிய சித்திரத்தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழா நாளை புதன்கிழமை(10) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் முன்னணி ஸ்தபதிகளில் ஒருவரான...

மூதாட்டிக்கு கிடைத்த மட்டுவில் கண்ணகை அம்பாள் அருள்

கடந்த வாரம் பிரசித்தி பெற்ற யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த மூதாட்டியிடம் ஏமாற்றி மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் நேற்றைய தினம்(08) அதே மூதாட்டியால் இனம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது...

ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி நாளை கொடியேற்றம்

யாழ்.ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம்  நாளை புதன்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாலய மஹோற்சவத்துக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் ஆலயச் சூழல் விழாக் கோலமும் பூண்டுள்ளது. தொடச்சியாகப் பத்துத் தினங்கள்...

இன்றைய ராசி பலன்

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.ரிஷபம் இன்று மனமகிழ்ச்சி தரும்...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>

செய்திகள்

உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...

வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார்.   இந்நிலையில் தேசிய ரீதியாக...

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

யாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி

இயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...

யாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்

இன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து

முல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...

பெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...?

எரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...

இலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்!

இலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

1 | 2 | 3 | 4 | 5 >>