வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  


இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.

கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.


கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

"பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி"

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு..."

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.


இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.

கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.

பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.


வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

மேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.

மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.

தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.

வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.

சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.

கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.

அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.

இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது

கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை,  புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.


ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.

கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

ஆன்மீக செய்திகள் 20.05.2019

ஆன்மீகச்செய்திகள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

ஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...

தற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...

கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...

யாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...

நல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா

தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...

வவுனியாவில் கோரவிபத்து! 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...

தூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...

தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...

யாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

பிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...

லண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது!

நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...

இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...

விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...

ஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! இலங்கை தமிழர் காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்

சுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>