வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  


இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.

கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.


கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

"பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி"

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு..."

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.


இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.

கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.

பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.


வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

மேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.

மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.

தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.

வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.

சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.

கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.

அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.

இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது

கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை,  புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.


ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.

கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

ஆன்மீக செய்திகள் 20.05.2019

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019

மேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...

நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...

பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...

மாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்!

யாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...

நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி!

சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...

இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019

மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...

நல்லூரிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...

யாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...

வவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...

குறைக்கப்படுகிறது எரிபொருட்களின் விலை !

எரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.   ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை

கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...

மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி-  ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...

நள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை

இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...

தலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

பேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற...

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு...

விவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்

குடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...

குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்

குளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...

அஜீரணம் ஏற்படுவது ஏன்? படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...

ஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை

5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...

<< 74 | 75 | 76 | 77 | 78