வவுனியா யாழ். ரயிலில் லண்டனைச் சேர்ந்தவரின் உடமைகள் மாயம்

வவுனியா யாழ். ரயிலில் லண்டனைச் சேர்ந்தவரின்  உடமைகள் மாயம்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஒருவரின் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகையிரதத்தில் காணாமற்போயுள்ளன.

நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வருகை தந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக யாழ்.சிறு குற்றத்தடுப்புப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.