வவுனியாவில் எரிபொருள் நிலையத்தில் திடீர் தீயினால் இருவர் காயம்

வவுனியாவில் எரிபொருள் நிலையத்தில் திடீர்  தீயினால் இருவர் காயம்

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென பரவிய தீயினால் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய ஊழியரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.