வவுனியாவில் தொடரும் மழை: 29ஆயிரம் மக்கள் பாதிப்பு

வவுனியாவில் தொடரும் மழை: 29ஆயிரம் மக்கள் பாதிப்பு
வவுனியாவில் தொடரும் மழை, வெள்ளத்தால் 29 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 4 ஆயிரத்து 156 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 34 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 
 
இதேவேளை இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்க வவுனியா பிரதேச செயலர் பிரிவில் 18 நலன்புரி நிலையங்களும், செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவில் 16 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 
 
மேலும் சீரற்ற காலநிலையால் 91 வீடுகள் முழுமையாகவும், 247 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.