வீட்டில் பணப்பிரச்சனையா..? இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

வீட்டில் பணப்பிரச்சனையா..?  இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுகச் சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.

இந்தப் பிரச்சனைகள் தீருவதற்கு முன்னோர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம் . வீண் விரையங்கள் ஏற்பட்டு தவிப்பவர்கள் , எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாமல் செலவினங்களை சந்திப்பவர்கள் தினமும் காலையில் உங்கள் வீட்டு துளசி மாடங்களில் இருக்கும் துளசிச் செடியிலிருந்து 20 துளசி இலைகளை பறித்து நீரில் போட்டு லேசாக கொதிக்க வைக்க வேண்டும் .

பிறகு அந்த துளசி இலைகளை நீங்கள் பருகுகின்ற நீரில் போட்டு , " ஓம் தன பிராப்தி நமஹ " எனும் மந்திரத்தை மனதிற்குள் ஒன்பது முறை துதித்தவாறே நீரை பருக வேண்டும் . இந்த பரிகாரத்தை உங்களின் முழு மனதோடு , அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் .



மேற்கண்ட முறையில் பரிகாரத்தை செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட பண கஷ்டங்களும் தீரும் . வீண் விரயங்கள் ஏற்படாமல் காக்கும் . சம்பாதிக்கின்ற பணத்தை அதிக அளவில் சேமிக்க முடியும் . இந்த பரிகாரத்திற்க்கு குறிப்பிட்ட நாட்கள் தான் செய்ய வேண்டும் என்கிற காலவரையறை ஏதும் கிடையாது . உங்களின் பணம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் வரை பரிகாரத்தை செய்யலாம் . உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும் .

மேலும் கீழ்கண்ட விஷயங்களையும் கடைப்பிடிக்கலாம்:

வியாழக்கிழமை விரதமிருந்து குபேரனை வழிபட பணப்பிரச்சனை படிப்படியாக தீர்ந்து பணம் வர ஆரம்பிக்கும் .

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும் . வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் .

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும் , ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர் . எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும் .

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும் . பின் மஞ்சள் , குங்குமம் தரவும் . இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும் .

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது . தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது . பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது . பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும் .

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால் , தயர் , குடிநீர் , உப்பு , ஊசி , நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது . பணம் ஓடிவிடும்.

ஆன்மீக செய்திகள்  08.07.2019

ஆன்மீகச்செய்திகள்

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்

தமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..!யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...

இன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019

சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும்   அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா  14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு  அருள்பாலிக்கும்  அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா  பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...

புத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்

புத்தூர் ஞானவைரவர்  தேவஸ்தான இறுதி நாளான  தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும்  மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள்  இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...

வீட்டில் பணப்பிரச்சனையா..? இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...

கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்

இலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...

செம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் "108" பானைப் பொங்கலும்  இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019

யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை...

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...

நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...

ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...

பாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.    தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...

வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...

பூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...

முல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

பிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>