வீணாலயா 2015 கலை மாலை

வீணாலயா 2015 கலை மாலை

அன்பு உறவுகளே! 
பிரித்தானியாவிலுள்ள ரட்ணம் அறக்கட்டளை நிறுவனத்தினரின் ஆதரவில் சங்கீத வித்துவான் ஸ்ரீமதி சிவதாரினி சகாதேவன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் வீணலயா 2015 என்னும் கலைமாலை எதிர்வரும் 28-03-15 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் நடைபெற உள்ளது. 
இந் நிகழ்வில் பெறப்படும் நிதி அனைத்தையும் பூமகள் நற்பணிமன்றத்திற்கு நன்கொடையா வழங்குவதற்கு மேற்குறிப்பிட்ட அமைப்பினர் முன்வந்துள்ளனர். இந் நிகழ்வினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் மனமுவர்ந்து வழங்குமாறு பூமகள் நற்பணி மன்றம் வேண்டி நிற்கின்றது.
இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு தேவைப்படும் நுழைவுச்சீட்டுக்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
மேலும் இந் நிகழ்விற்கான விழா மலர் ஒன்றையும் அன்றைய தினம் வெளியிட உள்ளோம், அவ் விழா மலரில் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களையும் பிரசுரிக்க உள்ளோம். உங்கள் வியாபர நிறுவனங்களின் விளம்பரத்தினையும் இவ் விழா மலரில் இணைத்து உங்கள் நிறுவனங்களை பிரபலப்படுத்துவதோடு பூமகள் நற்பணி மன்றத்தையும் வலுப்பெறச் செய்யுங்கள். 
நன்றி 
நுழைவுச்சீட்டின் விலை: £10.00 மட்டுமே

 

தொடர்புகளுக்கு: 
பிரித்தானியா: 07850 776 224 - 07865 157 615 - 07989 253 882 
சுவிஸ்: 0789 009 006 – 07939 68042 
பிரான்ஸ்: 0652 187 959

ஜெர்மனி :00497131204282