வெளிநாடுகளுக்கு அடையாள அட்டை கொண்டு செல்லத் தடை!

வெளிநாடுகளுக்கு அடையாள அட்டை கொண்டு செல்லத் தடை!

வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு விதித்துள்ளது. தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழில் மாத்திரமே காணப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய தேவையில்லை என அதற்கு காரணமும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு நீண்ட காலப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டுசெல்வது தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் ஆறு மாதங்களுக்கு அதிகமாக தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டைகளை  வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அவை செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்துள்ளார்.