வெளிநாட்டில் இலங்கை இளநீருக்கு கிராக்கி

வெளிநாட்டில்  இலங்கை இளநீருக்கு  கிராக்கி

சர்வதேச சந்தையில் தற்போது இலங்கையின் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கையின் இளநீருக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.   

இலங்கையிலிருந்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இதன்படி இலங்கையிலிருந்து  மாதாந்தம் 2,00,000 இளநீர் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

 கடந்த காலங்களில் பெரும்பாலும் உள்நாட்டு சந்தைகளுக்கே இளநீர் விநியோகிக்கப்பட்டதாகவும் வருடாந்தம் சுமார் 6,500 இளநீர் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் நிலையத்தின் பணிப்பாளர்சுட்டிக்காட்டியுள்ளார்.