ஸ்ரீ ஞான வைரவர் வரலாறு

ஸ்ரீ ஞான வைரவர் வரலாறு


இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம்.

குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும் செழித்துவளரும் பொன் விளையும் பூமி எனக் கூறலாம். இங்கு சைவமும், தமிழும் ஒருங்கே வளர்ந்து மேலும் இக்கிராமத்தை மேலும் அழகுறச்செகிறது. இக்கிராமத்திலேதான் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் உதித்து சைவத்துக்கும் தமிலுக்கும் தொண்டாற்றினார். சிறுப்பிட்டி கிராமம் ஒரு பெரிய கிராமமாகையால் இதனை ஐந்து பகுதிகளாக {வடக்கு, கிழக்கு, தேற்கு, மேற்கு, மத்தி} என பிரித்திருந்தனர். இதில் சிறுப்பிட்டி மேற்கு பகுதியை அழகுறச்செயும் வகையில் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

சில நூற்றாண்டுக்கு முன்பாக அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் தங்கள் சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஒரு பனந்தோப்பு மத்தியில் இருந்த வேப்பமர நிழலில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்த அடிப்படையில் உருவாக்கப்படதே ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமாகும்.

சூலத்தை வைத்து வழிபட்டுவரும் காலத்தில் வாழ்ந்த அடியவர்களின் வழித்தோன்றலில் ஒருவரான இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் ஒத்துளைப்புடன் இவ்ஆலயத்துக்கென ஒரு சுண்ணாம்புக்கல்லிலாலான கட்டிடத்தை கட்டி அதில் ஞானவைரவர் விக்கிரகத்தை இஸ்தாபித்து பூசைகளை மேற்கொண்டு வழிபட்டுவரலாயினர். இப்படி வரும் காலத்தில் ஆலயத்தில் எற்பட்ட சிற்சில பிரச்சினைகளால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆலயம் பூசைகள் எதுவும் இன்றி தேடுவாரற்ற நிலயில் சில ஆண்டுகளாக இருந்தமயால் கறையான் புற்று மூடி ஆலயம் சிரழிந்துவிட்டது.





எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.

சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி சந்திரன் கபால பைரவர் இந்திராணிசெவ்வாய் சண்ட பைரவர் கௌமாரிபுதன் உன்மத்த பைரவர் வராகிகுரு அசிதாங்க பைரவர் பிராமகி சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரிசனி க்ரோதனபைரவர் வைஷ்ணவிராகு சம்கார பைரவர் சண்டிகைகேது பீஷ்ண பைரவர் சாமுண்டி

நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்

நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி

பைரவர் வழிபாடு கைமேல் பலன்
ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பைரவ காயத்ரி:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் :

ஞாயிற்றுகிழமை
தள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

ஸ்ரீ கால பைரவர்
காசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்
தல வரலாறு:

முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல் பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்கள்

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:
"ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்தர்ய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:"
இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:
"ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம் குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா"
சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"
இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க...

பைரவர் காயத்ரி 2:
"ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"
நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்...


சிறுப்பிட்டி செய்திகள்

  ஆன்மீகம், 30.11.2018

உலகச்செய்திகள்

லண்டனில் மீண்டும் தாக்குதல்!! பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ்...

சுவிஸில் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க கோரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிஸின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியை(SVP) சேர்ந்த எம்.பியான Gregor Rutz என்பவர் தான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஐரோப்பிய...

ஏமனில் காலராவுக்கு 115 பேர் பலி: 8,500 பேர் பாதிப்பு

ஏமனில் காலரா நோய் பரவி வருவதையடுத்து சுமார் 115 பேர் இதற்கு பரிதாபகமாக பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் பரவி வரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேடி வரும் நோயாளிகளை கவனிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

பிச்சை எடுத்தால் 100 பிராங்க் அபராதம்: புதிய சட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள வாட் மாகாணத்தில் பிச்சை எடுப்பதற்கு நிரந்தரமான தடை விதிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட...

உங்க இராசிக்கு அழகான கணவன்/மனைவி கிடைப்பாங்களா???

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவது “திங்க...

யூரோவிற்கு நிகரான பவுண்ட பெறுமதி அதிகரிப்பு

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றதை அடுத்து யூரோவுக்கு எதிரான பவுண்டின் பெறுமதி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்ரோன் வெற்றி பெற்றால் பவுண்டின் பெறுமதி சரிவை சந்திக்கும் என...

அவுஸ்திரேலியாவில் புதிய விசா நடைமுறை!

அவுஸ்திரேலியாவில் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தமது பெற்றோர்களை தம்முடன் அழைத்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து புதிய விசா வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரும். தமது பெற்றோர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்காக 20,000 டொலர் செலுத்த...

அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.   தற்போது தீவிரவாதிகள்...

சுவிட்சர்லாந்தில் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாத இளைஞர்கள்

போதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு...

பிரித்தானியாவில் இன்று முதல் அதிரடி சட்டங்கள் அமுல்

பிரித்தானியாவில் முக்கிய சட்டங்கள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஊதியம் பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 18-20 வயது நபர்களுக்கு £5.60ம், 21-24...

1 | 2 | 3 | 4 | 5 >>