.யாழ்.ஏழாலை மயிலங்காட்டில் கசிப்புக் கொண்டு சென்ற இருவர் கைது

.யாழ்.ஏழாலை மயிலங்காட்டில்  கசிப்புக் கொண்டு சென்ற இருவர் கைது

யாழ்.குப்பிளான் பகுதியிலிருந்து ஏழாலை மயிலங்காட்டுப் பகுதிக்குத் துவிச்சக்கர வண்டியில் கசிப்புக் கொண்டு சென்ற இருவர் நேற்றுப் புதன்கிழமை (18.02.2015) சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துவிச்சக்கர வண்டியில் கசிப்புக் கொண்டு செல்லப்படுவதாகச் சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 500 மில்லி லீற்றர் அளவுள்ள இரண்டு கசிப்புப் போத்தல்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.