1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்

முல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014

 

திதி : 9 ஒக்ரோபர் 2015

 

அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய்
இருந்த உங்களை வழியனுப்பி
ஆண்டொன்று ஆனதப்பா!

உங்கள் திருமுகம்
இனி எப்பிறப்பில் காண்போமப்பா?

கடைசி நிமிடத்திலும் எமை நினைத்தே
உங்கள் வார்த்தைகள் வந்தனவாம்
எமக்கேதும் குறைவில்லை எம் தெய்வமே
நீங்கள் எம்முடன் இல்லை என்பதைத்தவிர!

நீங்கள் கண்ட கனவெல்லாம்
நனவாக்கி வாழ்வதற்கு நாமுள்ளோம்
கலக்கமின்றி தூங்கிடுங்கள் அந்தக்கொடிய
காலனவன் கட்டளையை ஏற்றுவிட்டீர்!

அன்பான எம் அப்பாவின்
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் உங்கள்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை சிறுப்பிட்டியில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

— கனடா
தொலைபேசி: +14162847905

- — இலங்கை
செல்லிடப்பேசி: +94773445146

- — பிரித்தானியா
தொலைபேசி: +441322293891