மகனைக் படிக்க வைக்க தீயில் உயிர் விட்ட தாய். சூராவத்தையில் சம்பவம்

    மகனைக் படிக்க வைக்க தீயில் உயிர் விட்ட தாய். சூராவத்தையில் சம்பவம்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார்.

 
சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை.
 
சிவசோதி தனது உடலில் மண்ணென்ணையை ஊற்றி, "நீ செல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன்' என்று மிரட்டியுள்ளார். அதன்பின்னர் மகன் எழுந்து சென்று விட்டார்.
 
அந்தத் தாய் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றியதைக் கவனத்தில் கொள்ளாது சமையலறைக்குச் சென்று அடுப்பருகே சென்றுள்ளார். அப்போது அவர் மீது தீப்பற்றிக் கொண்டுள்ளது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
உடனடியாக சிவசோதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.
 
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டனர்.