2014 இல் இனங்காணப்பட்ட 234 எயிட்ஸ் நோயாளிகள்

2014 இல் இனங்காணப்பட்ட 234 எயிட்ஸ் நோயாளிகள்

கடந்த 2014 ஆம் ஆண்டில் நாட்டில் எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 235 பேர் இனங்காணப்பட்டதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள். எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளான 14 பேர் கடந்த வருடம் இறந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலியல் தொழிலாளிகள், போதைப் பொருள் ஊசிகளை பயன்படுத்துவோர், சுற்றுலா வழிக்காட்டிகள், பீச் போய்ஸ் போன்றவர்கள் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களுக்கு நோய் ஆபத்து பற்றி தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாகவும் மருத்துவர் லியனகே மேலும் தெரிவித்துள்ளார்