23 வருடங்களுக்கு முன் காணாமல் போனவரை அழைத்து செல்ல நீதிமன்றம் கடிதம்

கடந்த இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமற்போன யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் இருந்து பெற்றோருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது.

சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் (வயது- 53) என்பவரையே அழைத்துச் செல்லுமாறு கடிதம் அனுப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு, கொழும்பு, ஆமர் வீதியில் உள்ள கடையொன்றில் குறிப்பிட்ட நபர் 23 வருடங்களுக்கு முன்னர் சிப்பந்தியாக கடமையாற்றிய வேளை கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்தார்.

பெற்றோர்கள் மகனை எங்கு தேடியும் விவரம் அறியமுடியாத நிலையில் வயதாகி இறந்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட நபரை உறவினர்கள் வந்து அழைத்துச் செல்லும்படி நீதிமன்றத்தினால் கடிதம் அனுப்பபப்பட்டுள்ளது.

இதனால் தற்போது உறவினர்கள் குறிப்பிட்ட நபரை அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது.