65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆசிரியையான ஆன்கிரெட் ரவ்னிக்(65). அவருக்கு 13 குழந்தைகளும், 7 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 10 வயதாகும் அவரது கடைசி மகள் அவரிடம் விளையாட தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்டுள்ளார்.

இதையடுத்து ஆன்கிரெட் உக்ரைன் சென்று செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் கர்ப்பமானார்.

கர்ப்பமாகிய 26 வாரங்களில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற பெண் என்ற பெருமையை ஆன்கிரெட் பெற்றுள்ளார்.

முன்னதாக 2006ம் ஆண்டு ஸ்பெயினில் 66 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மரியா டெல் கார்மன் பவ்சாதா லாரா தான் அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் 2008ம் ஆண்டு தனது 70வது வயதில் இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற ஓம்காரி பன்வர் தான் அதிக வயதில் குழந்தையை பெற்றெடுத்தவர் என்று சிலர் கூறுகிறார்கள்.

65 வயதில் குழந்தை பெற்றெடுத்தது பற்றி பிறர் என்ன கூறுவார்கள் என்ற கவலை தனக்கு இல்லை என்கிறார் ஆன்கிரெட்.